Skip to content

தமிழில் சிங்களம் கற்க ஸ்மார்ட்டான வழி!

சிங்கள வார்த்தை ஒவ்வொன்றுக்கும் தமிழ் விளக்கம் + Audio உச்சரிப்பு + games + AI assisted spaced repetition

#spoken#vocabulary#effective#fun

Already purchased? Login to start studying

Join our community for updates, promotions, and resources:

முக்கிய Features

Pronunciation guide + meaning + audio

சிங்கள வார்த்தைகள் மற்றும் வாக்கியங்களை எப்படி சரியாக உச்சரிப்பது என்பதற்கு தெளிவான தமிழ் விளக்கம், உச்சரிப்பு குறிப்புகள் மற்றும் ஆடியோ உதவிகள் உள்ளன.

SinhalaMeaningAudio
මගේ පවුලේ පස් දෙනෙක් ඉන්නවා
magē pavulē pas denek innavāமகே³ பவுலே பஸ் தெ³னெக் இன்னவா
எனது குடும்பத்தில் ஐந்து பேர் இருக்கிறார்கள்
මගේ අම්මාගේ නම .............................
magē ammāgē nama .............................மகே³ அம்மாகே³ நம .............................
எனது அம்மாவின் பெயர் ..............
මට පොත දෙන්න
maṭa pota dennaமட பொத தெ³ன்ன
எனக்கு புத்தகத்தைத்‌ தாங்கோ

படிப்பை game ஆக்குங்க!

புதிய சொற்களை மனப்பாடம் செய்வது bore அடித்தால், Quizzes, games, flashcards மூலம் விளையாட்டாகவே கற்றுக் கொள்ளுங்கள்.

வாசிப்பு, பேச்சு – இரண்டிற்கும் ஏற்றபடி பயிற்சி செய்யலாம்!

Lesson அட்டவணையில் Sinhala அல்லது Tamil/Meaning column-ஐ முழுமையாக மறைத்துவிட்டு, ஒவ்வொரு row-விலும் உள்ள eye icon-ஐ tap செய்து உங்கள் பதிலைச் சரிபார்க்கலாம்.

Flashcards-இலும் இதே தேர்வு உண்டு: Sinhala முதலில் காட்டவா, Tamil முதலில் காட்டவா என்பதை ஒரு tap-இல் மாற்றலாம்.

Sinhala → Tamil: சிங்களத்தில் பார்த்து அர்த்தம் சொல்லிப் பார்க்க (படிக்கும், கேட்கும் போது தேவைப்படும் திறன்).

Tamil → Sinhala: தமிழில் பார்த்து சிங்களத்தில் சொல்லிப் பார்க்க (நீங்களே பேச வேண்டியபோது தேவைப்படும் திறன்).

ஒரு row-ஐத் திறந்தால் மற்ற row-கள் மறைந்தே இருக்கும், அதனால் ஒவ்வொன்றாக நேர்மையாகச் சோதிக்கலாம். நீங்கள் தேர்ந்தெடுத்தது நினைவில் வைக்கப்பட்டு Today's study-க்கும் பொருந்தும்.

பிடித்த notes-ஐ save பண்ணுங்க!

மறந்து போகும் ஒரு வார்த்தை அல்லது மீண்டும் கேட்க வேண்டிய ஒரு உச்சரிப்பு கண்ணில் பட்டால், பக்கத்தில் இருக்கும் heart-ஐ tap பண்ணுங்க. அது உங்களுக்கே சொந்தமான favorites பட்டியலில் சேர்ந்துவிடும். ஒரு சிறிய, focused practice set எப்போதும் தயாராக இருக்கும்.

Spaced repetition எப்போது படிக்க வேண்டும் என்று தீர்மானிக்கும்; favorites எதற்கு கூடுதல் கவனம் தேவை என்பதை நீங்களே தீர்மானிக்கிறீர்கள். Heart-ஐ மீண்டும் tap பண்ணி நீக்கினாலும், அந்த note-இன் study progress அப்படியே இருக்கும்.

Flashcards: சேமித்த notes-ஐ மட்டும் வைத்து recall practice.

MCQ: எவ்வளவு நினைவில் இருக்கு என்று விரைவாக சரிபார்க்க.

Match: சிங்கள வார்த்தைகளை அவற்றின் அர்த்தத்துடன் பொருத்தி விளையாடி practice பண்ண.

Smart spaced repetition

இன்று எதைப் படிக்க வேண்டும் என்பதை app-ஏ சொல்லும். Today's study-ஐத் திறந்தால், மீட்டிப் பார்க்க வேண்டிய நேரம் வந்த notes முதலில் வரும்; அவை 20-ஐ விடக் குறைவாக இருந்தால், புதிய notes சேர்த்து அன்றைய list நிரப்பப்படும்.

Smart study பண்ணி topper ஆகறதுக்கு formula

The secret to learning more while studying less.

இந்த system உங்கள் கற்றல் திறனை மேம்படுத்தி, நீண்ட காலத்திற்கு vocabulary-ஐ நினைவில் வைத்திருக்க உதவும்.

படிக்கும் மொத்த நேரத்தை குறைத்து, அதிக அளவு பலனைப் பெறலாம்.

கடினமான விடயங்களுக்கு அதிக கவனம் செலுத்தியும், ஏற்கனவே தெரிந்த விடயங்களுக்கு குறைவான நேரம் ஒதுக்கியும் படிப்பதால் செயல்திறன் அதிகரிக்கும்.

நாம் படித்ததை மறக்கும் முன்பே அவற்றை மீட்டிப் பார்ப்பதால் நிரந்தர நினைவாற்றல் உருவாகிறது. Long-term retention guarantee!

Smart Spaced Repetition System

உள்ளடக்கம்

அன்றாட உரையாடல்களுக்கு பயன்படும் சொற்கள் மற்றும் வாக்கியங்களை, இலகுவாக கற்பதற்கான தளம்

இப்படியான சூழ்நிலைகளில் சிங்களத்தில் பேசலாம்

எழுத்துக்கள் மட்டுமல்ல. வங்கி, அலுவலகம், பஸ், சந்தை என நீங்கள் போகும் இடங்களில் தேவைப்படும் சொற்களும் வாக்கியங்களும்.

முழுப் பாடப் பட்டியல்

Vowels

உயிர் எழுத்துக்கள்

சிங்கள உயிர் எழுத்துக்களின் உச்சரிப்பு மற்றும் எழுதும் முறைகள்.

Consonants

மெய் எழுத்துக்கள்

சிங்கள மெய் எழுத்துக்களின் உச்சரிப்பு மற்றும் எழுதும் முறைகள்.

Similarities

எழுத்து வழக்கில் உள்ள ஒற்றுமைகள்

தமிழ், சிங்கள எழுத்துக்களில் உள்ள ஒற்றுமைகள்.

Greetings

வணக்கம் செலுத்தும் முறைகள்

அன்றாட உரையாடல்களுக்குத் தேவையான அடிப்படை சிங்கள வாழ்த்துக்கள். 'ஆயுபோவன்' முதல் காலை, மாலை, இரவு மற்றும் விசேட தினங்களுக்கான வாழ்த்துக்கள் வரை.

Basic Conversational Words

அடிப்படை உரையாடல் சொற்கள்

ஆம், இல்லை, சரி, பிழை, முடியும், முடியாது, வேண்டும், வேண்டாம் போன்ற தினசரி உரையாடலுக்குத் தேவையான அடிப்படை சொற்கள்.

Pronouns

பிரதிப் பெயர்ச்சொற்கள்

நான், நீ, அவர் போன்ற சிங்களப் பிரதிப் பெயர்ச்சொற்கள். ඔයා (நெருங்கிய), ඔබ (மரியாதை) ஆகிய இரு முறைகளுடன், "எனக்கு" (මට), "என்னிடமிருந்து" (මගෙන්) போன்ற வேற்றுமை உருபுகளையும் அறிமுகப்படுத்துகிறது.

Introducing Yourself

உங்களை அறிமுகப்படுத்துதல்

உங்களை சிங்களத்தில் எப்படி அறிமுகப்படுத்துவது? உங்கள் பெயர், வயது, குடும்ப விபரங்கள் மற்றும் பொழுதுபோக்குகளை சிங்களத்தில் சொல்வதற்கான அடிப்படை வாக்கியங்கள்.

Expressing Ideas: Your, To you

கருத்தை வெளிப்படுத்துதல்: உங்களுடைய — உங்களுக்கு

எதிரில் இருப்பவரிடம் கேள்விகள் கேட்கவும் அவர்களின் தகவல்களை அறியவும் இந்த அத்தியாயம் உதவுகிறது.

Speak With English Words

ஆங்கிலச் சொற்களுடன் சிங்களம் பேசுவது

சிங்களம் சரளமாகப் பேசத் தெரியாவிட்டாலும், 'Karanna', 'Dhenna', 'Eka' போன்ற சில அடிப்படைச் சொற்களை ஆங்கிலச் சொற்களுடன் இணைத்துப் பேசும் எளிய வழிமுறை.

Verbs and Tenses

சிங்கள வினைச்சொற்களும் காலங்களும்

சிங்கள வினைச்சொற்களை நிகழ்காலம், இறந்தகாலம், எதிர்காலம், கட்டளை, வினை எச்சம், மறுப்பு வடிவங்களில் பயன்படுத்தும் முறை. திணை, பால், எண் ஏற்ப வினைச்சொல் மாறாத எளிமையை உதாரணங்களுடன் விளக்கும் பாடம்.

Whose Is It? Belongings

யாருடையது? — உடைமை கேட்டல்

சிங்களத்தில் உடைமையைக் குறிக்கும் 'ගේ' விகுதி. මේක කාගේ? (இது யாருடையது?), ඔයාගේ (உங்களுடைய), එයාගේ (அவருடைய) ஆகிய வடிவங்களுடன், பெயர், வீடு, பாடசாலை மற்றும் விலங்குகளின் உடைமைகள் பற்றி வினவும் முறைகள்.

Family Members

குடும்ப அங்கத்தவர்கள்‌

அம்மா, அப்பா, அக்கா, தம்பி போன்ற குடும்ப உறுப்பினர்களை சிங்களத்தில் எப்படி அழைப்பது? தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் உள்ள ஒத்த சொற்களுடன் ('அம்மா', 'அக்கா') குடும்ப உறவுகளுக்கான பெயர்கள்.

Relatives

உறவினர்கள்

பாட்டி, தாத்தா, மாமா, மாமி, மச்சான் போன்ற உறவினர்களுக்கான சிங்களப் பெயர்கள். இரு மொழிகளுக்கும் இடையிலான ஒற்றுமைகளுடன் ('மாமா') உறவினர்களை அழைக்கும் முறைகள்.

Everyday Questions

அன்றாட வினாக்கள்

அன்றாட உரையாடலில் நண்பர்களிடம் கேட்கும் எளிய சிங்கள வினாக்கள். எங்கே, என்ன, எப்படி என்று கேட்பது முதல் பசி, சோர்வு, ஓய்வு நேரம் பற்றி விசாரிப்பது வரை.

Question Words

வினாச் சொற்கள்

சிங்கள வினாச் சொற்கள் ஒரே இடத்தில். මොකක්ද, මොනවාද, කවුද, කාටද, කොහෙද, කවද්ද, කීයද, කොච්චරද போன்ற சொற்களை ஒருமை/பன்மை, உயிருள்ளது/உயிரற்றது, விலை/அளவு என்ற வேறுபாடுகளுடன் கற்றல்.

Where, When, Why

எங்கே, எப்படி, எப்போது, ஏன்?

எங்கே, எப்படி, எப்போது, ஏன் என்று சிங்களத்தில் வினவும் முறைகள். කොහෙද, කොහොමද, කවද්ද, ඇයි ஆகிய வினாச் சொற்களுடன், பஸ் மற்றும் ரயில் பயணத்தின்போது கேட்கும் வினாக்களும் அடங்கும்.

Who, What, How Much

யார், என்ன, எவ்வளவு?

யார், என்ன, எவ்வளவு என்று சிங்களத்தில் வினவும் முறைகள். කවුද, කාටද, මොකක්ද, කොච්චර ஆகிய வினாச் சொற்களைப் பயன்படுத்தி நபர்களையும் பொருட்களையும் அடையாளம் காணுதல்.

Can, Want, Like

முடியும், வேண்டும், பிடிக்கும்

இயலுமை, தேவை, விருப்பம் ஆகியவற்றை சிங்களத்தில் வெளிப்படுத்தும் முறைகள். පුළුවන් (முடியும்), ඕනේ (வேண்டும்), එපා (வேண்டாம்), කැමතියි (பிடிக்கும்) ஆகிய சொற்களை மට, ඔයාට, අපිට, එයාට உடன் இணைத்துப் பேசுதல்.

Asking About That

அது சரியா? — பொருட்களைப் பற்றிக் கேட்டல்

ஒரு பொருளைச் சுட்டிக்காட்டி 'ඒක ...ද?' என்று வினா எழுப்பும் முறை. ඒක කුඩයක්ද? (அது குடையா?), ඒක හරිද? (அது சரியா?), ඒක ඇතිද? (அது போதுமா?) போன்ற வாக்கியங்களுடன் குடை, தொப்பி, கண்ணாடி ஆகிய சொற்களும்.

Present Tense

நிகழ்காலம்: சொல்லுதலும் கேட்டலும்

நிகழ்காலத்தில் ஒரு செய்தியைச் சொல்வதும், அதையே 'ද' சேர்த்து வினாவாக மாற்றுவதும். ඔයා එනවා / ඔයා එනවාද? போன்ற சொல்-வினா இணைகள் மூலம் சிங்கள வினா அமைப்பைப் பயிலுதல்.

Past Tense

இறந்தகாலம்: சொல்லுதலும் கேட்டலும்

இறந்தகாலத்தில் சொல்லுதலும் வினவுதலும். එයා ආවා / ඔයා ආවාද?, එයා කෑවා / ඔයා කෑවාද? போன்ற இணைகள் மூலம் நடந்து முடிந்த செயல்களைப் பற்றிப் பேசுதல்.

Future Tense

எதிர்காலம்: சொல்லுதலும் கேட்டலும்

எதிர்காலத்தில் சொல்லுதலும் வினவுதலும். එයා එයි / ඒක එයිද?, ඒක යයි / ඒක යයිද? போன்ற இணைகள் மூலம் இனி நடக்கவிருப்பதைப் பற்றிப் பேசுதல்.

Let's, Shall We

போவோம், போவோமா? — ஒன்றாகச் செய்தல்

'நாம் போவோம்', 'நாம் போவோமா?' என்று ஒன்றாகச் செய்யக் கூப்பிடும் முறை. අපි යමු / අපි යමුද?, අපිට යන්න පුළුවන් போன்ற வடிவங்களுடன் அழைப்பும் அனுமதி கேட்டலும்.

Polite Requests

மரியாதையாகவும்‌ அன்பாகவும்‌ வேண்டுதல்‌

சிங்களத்தில் ஒருவரிடம் மரியாதையாக உதவி கேட்பது எப்படி? 'தயவுசெய்து' (கருணாகர) போன்ற சொற்களைப் பயன்படுத்தி, கோரிக்கைகளை முன்வைப்பதற்கான வாக்கியங்கள்.

Commands

கட்டளைகள்‌

சிங்களத்தில் எளிய கட்டளைகள் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்குவது எப்படி? விளையாட்டு மற்றும் வகுப்பறைச் சூழல்களில் பயன்படும் வாக்கியங்கள்.

Everyday Words

தினந்தோறும் காணும் சொற்கள்

இந்த அத்தியாயம் பொது இடங்களில் நாம் அடிக்கடி காணும் அறிவிப்புப் பலகைகள், வங்கிகள் மற்றும் பொதுச் சேவைகள் தொடர்பான சொற்களை அறிமுகப்படுத்துகிறது.

Verbs

வினைச்சொற்கள்

'வா', 'போ', 'சாப்பிடு', 'குடி' போன்ற அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படும் அடிப்படை சிங்கள வினைச்சொற்கள் மற்றும் அவற்றை வாக்கியங்களில் பயன்படுத்தும் முறைகள்.

Numbers

இலக்கங்கள்

சிங்களத்தில் 1 முதல் 50 வரையிலான எண்கள். நேரம் சொல்ல, பொருட்களை வாங்க மற்றும் அன்றாட பரிவர்த்தனைகளுக்குத் தேவையான எண்கள்.

Entering an Office

அலுவலகமொன்றிற்குள் செல்லுதல்

அலுவலகம் ஒன்றில் உரையாடத் தேவையான முக்கிய சிங்கள வாக்கியங்கள்.

Office Interview Conversation

அலுவலக நேர்காணல் உரையாடல்

அலுவலகத்தில் அதிகாரி ஒருவருக்கும் தமிழினிக்கும் இடையில் நடக்கும் முழு சிங்கள உரையாடல். ஒவ்வொரு வசனத்துக்கும் தமிழ் எழுத்து வடிவம், தமிழ் அர்த்தம், முக்கிய சொற்கள்.

Ordering Food Conversation

உணவு ஒழுங்கு செய்தல் உரையாடல்

உணவகத்தில் உணவு ஒழுங்கு செய்து பில் கேட்பதற்கான முழு சிங்கள உரையாடல். தோசை, வடை, இட்லி, வாழைப்பழம், தண்ணீர் என ஒவ்வொரு வசனத்துக்கும் தமிழ் எழுத்து வடிவம், தமிழ் அர்த்தம், முக்கிய சொற்கள்.

Colors

நிறங்கள்

சிவப்பு, நீலம், மஞ்சள் போன்ற நிறங்களின் சிங்களப் பெயர்கள். தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் உள்ள ஒற்றுமைகளுடன் நிறங்களை அடையாளம் காணக் கற்றுக்கொள்ளுங்கள்.

Days of the Week

வாரத்திலுள்ள நாட்கள்

வாரத்தின் நாட்கள் மற்றும் 'இன்று' (අද), 'நாளை' (හෙට), 'நேற்று' (ඊයේ) போன்ற காலத்தைக் குறிக்கும் முக்கிய சிங்களச் சொற்கள்.

Months

மாதங்கள்

சிங்களத்தில் 12 மாதங்களின் பெயர்கள். ஆங்கிலப் பெயர்களுடன் நெருங்கிய ஒற்றுமை உள்ள இம்மாதங்களின் சரியான சிங்கள உச்சரிப்பைக் கற்றுக்கொள்ளுங்கள்.

Occupations

தொழில்கள்

ஆசிரியர், வைத்தியர், பொறியியலாளர், சாரதி, பொலிஸ் அதிகாரி போன்ற தொழில்களின் சிங்களப் பெயர்கள். ஒருவரது தொழிலைப் பற்றிக் கேட்கவும் சொல்லவும் தேவையான சொற்கள்.

Food Items

உணவு வகைகள்

சோறு, அப்பம், இடியப்பம், பிட்டு போன்ற உணவுகளின் சிங்களப் பெயர்கள். உணவகங்களில் உணவை order செய்வதற்கும் உணவுப் பழக்கங்கள் பற்றிப் பேசுவதற்கும் தேவையான சொற்கள்.

Beverages

பான வகைகள்

தேநீர், கோப்பி, பழரசம், இளநீர் மற்றும் தண்ணீர் (වතුර) போன்ற பல்வேறு பானங்களின் சிங்களப் பெயர்கள்.

Vegetables

மரக்கறி வகைகள்

சந்தையில் மரக்கறிகள் வாங்கத் தேவையான சிங்களச் சொற்கள். போஞ்சி, கரட், கோவா போன்ற ஆங்கிலச் சொற்களுடன், கத்தரிக்காய் (வம்படு), வெண்டிக்காய் (பண்டக்கா) போன்ற பெயர்களும்.

Fruits

பழ வகைகள்

வாழைப்பழம், மாம்பழம், அன்னாசி போன்ற பழங்களின் சிங்களப் பெயர்கள். பழக்கடைகளில் பழங்களை வாங்கவும் சுவைகளைப் பற்றிப் பேசவும் தேவையான சொற்கள்.

Flowers

பூக்கள்

மல்லிகை (பிச்ச), தாமரை (நெළුම්), ரோஜா (ரோச) போன்ற பூக்களின் சிங்களப் பெயர்கள்.

Trees

மரங்கள்

தென்னை, பனை, மாமரம் போன்ற முக்கிய மரங்களின் சிங்களப் பெயர்கள். 'கொஸ் கச' (பலா மரம்) போலப் பழங்களுடன் தொடர்புடைய மரங்களின் பெயர்கள்.

Vines

கொடிகள்

வெற்றிலைக்கொடி, திராட்சைக்கொடி போன்ற கொடி வகைகளின் சிங்களப் பெயர்கள். தமிழில் 'கொடி' என்பது போல, சிங்களத்தில் 'வැල' (වැල) என்ற சொல்லைப் பயன்படுத்தும் விதம்.

Birds

பறவைகள்

மயில், கிளி, காகம் போன்ற பறவைகளின் சிங்களப் பெயர்கள்.

Animals

மிருகங்கள்

யானை, புலி, சிங்கம் போன்ற வனவிலங்குகள், செல்லப் பிராணிகள் மற்றும் பண்ணை விலங்குகளின் சிங்களப் பெயர்கள்.

Classroom Objects

வகுப்பறை பொருட்கள்

புத்தகம், மேசை, கதிரை போன்ற வகுப்பறையில் உள்ள பொருட்களின் சிங்களப் பெயர்கள்.

Public Places

பொது இடங்கள்

பாடசாலை, வைத்தியசாலை, கோயில், சந்தை போன்ற பொது இடங்களின் சிங்களப் பெயர்கள். தமிழில் உள்ள 'கோயில்', 'பொலிஸ்' போன்ற சொற்கள் சிங்களத்திலும் புழங்குவதைக் கவனிக்கவும்.

Our Surroundings

எம்மைச் சூழவுள்ளவை

சூரியன், சந்திரன், வானம், கடல் போன்ற எம்மைச் சுற்றியுள்ள இயற்கை அம்சங்களின் சிங்களப் பெயர்கள்.

Grammar

இலக்கணம்

தமிழ், சிங்கள இலக்கணத்தில் உள்ள ஒற்றுமைகளும் வேற்றுமைகளும்.

Progress tracking

நேற்று 10 சிங்கள வார்த்தைகள், இன்று 50 வார்த்தைகள் என உங்கள் தினசரி முன்னேற்றத்தை detailed statistics மூலம் கண்காணிக்கலாம்.

Overall progress
Example data, not your actual progress.

116 / 1381

words mastered

8% complete

New
1,100 not started
Learning
52 in active practice
Relearning
13 being reinforced
Mastered
116 remembered well

12 studied today · 5 due

Learn on any device

Phone, tablet, laptop என எந்த சாதனத்திலும் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம்.

Eye-friendly design

இரவில் படிக்கும்போது Dark mode-ஐப் பயன்படுத்துங்கள். பகலில் Light mode-க்கு மாறுங்கள். கண்களுக்கு சிரமம் இல்லாமல் வசதியாகப் படிக்கலாம்.

Powering Your Education with the Best Voices

தரமான கற்றல் அனுபவத்தை வழங்க, தலைசிறந்த YouTube ஆசிரியர்களுடன் நாங்கள் கைகோர்த்துள்ளோம்.

எமது பாடத்திட்டங்களில் YouTube காணொளிகளைப் பயன்படுத்த அனுமதியளித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். சிறந்த கற்றல் அனுபவத்தை மாணவர்களுக்கு வழங்க இவர்களது தரமான படைப்புகள் பெரிதும் உதவுகின்றன.

Featured Educational Channels

Channel NIE - தமிழ் logo

Channel NIE - தமிழ்

தேசிய கல்வி அலைவரிசை - இலவசக் கல்வியின் டிஜிட்டல் திட்டம்

Subscribe on YouTube
Sinhala Tamil Classroom logo

Sinhala Tamil Classroom

Quality Sinhala language education content

Subscribe on YouTube
Department of Official Languages - Ministry of Public Administration, Home Affairs, Provincial Councils and Local Government logo

Department of Official Languages - Ministry of Public Administration, Home Affairs, Provincial Councils and Local Government

அரசகரும மொழிகள் திணைக்களம் - அரச மொழிப் பயிற்சிக்கான உத்தியோகபூர்வ பாடங்கள்

Subscribe on YouTube

உங்கள் ஆதரவு முக்கியம்!

தரமான கல்வியை வழங்கும் இவர்களது முயற்சிக்கு ஆதரவளிக்க, மறக்காமல் இவர்களது சேனல்களை Subscribe செய்யுங்கள்.

Simple & Affordable Pricing

Your education is your best investment

Regular lifetime price: LKR 6,000

LKR 4,000
Lifetime Access Offer

One-time payment, lifetime access

Audio Pronunciation Guide - தெளிவான தமிழ் விளக்கத்துடன் கூடிய ஆடியோ

Gamified Learning - Quizzes, Games & Flashcards

Smart Revision - Spaced Repetition தொழில்நுட்பம்

Progress Analytics - உங்கள் கற்றல் வளர்ச்சியை கண்காணிக்கலாம்

Lifetime Access (Limited Time) - ஒரே கட்டணம், வாழ்நாள் முழுவதும் கற்கலாம்!

Secure Checkout - 100% பாதுகாப்பான கட்டணம்.

Works on modern Mobile, Tablet & Laptop. Requires Internet Connection.

FAQ

உங்களுக்கு இருக்கக்கூடிய சந்தேகங்களுக்கான பதில்கள்

Ready to start learning Sinhala? Tamil speakers-காக உருவாக்கப்பட்ட இந்த app மூலம் சிங்களம் கற்க தொடங்குங்கள்.