உயர்திணை, அஃறிணை
தமிழில் பெயர்ச் சொற்களை இரு பெரும் பிரிவாகப் பிரித்து உயர்திணை, அஃறிணை எனப் பெயரிடுகின்றோம்.
உயர்திணைப் பெயருடன் வரும் வினைச்சொல் அஃறிணைப் பெயருடன் வரும்பொழுது மாறுகின்றது.
உதாரணமாக:-
அவன் வந்தான் என்று வரும் வினைச்சொல் அஃறிணைப் பெயருடன் வரும்பொழுது அதாவது “மாடு” என்ற அஃறிணைப் பெயரோடு வரும்பொழுது “மாடு வந்தது” என மாறுகின்றது.
மாடு வந்தான் என்றோ மனிதன் வந்தது என்றோ தமிழில் எழுதும் வழக்கமில்லை. ஆனால் சிங்களத்தில் இவ் விதி இல்லை. இதனால் உயர்திணைக்கும் அஃறிணைக்கும் வினைச்சொல் ஒரே விதமாகவே இருக்கும்.
உதாரணமாக:-
அவன் வந்தான் என்பதை சிங்களத்தில் ඔහු ආවේය (ஒஹு ஆவேய) என எழுதுவோம்.
நாய் வந்தது என்பதை බල්ලා ආවේය (Bபல்லா ஆவேய) என்றே எழுதவேண்டும்.
சிங்கள வினைச் சொற்களில் வித்தியாசம் ஏற்படவில்லை. இது ஒரு முக்கிய விதி.
அவன் வந்தான்: ඔහු ආවේය(ஒஹு ஆவேய)
நாய் வந்தது: බල්ලා ආවේය(Bபல்லா ஆவேய)