Skip to content

உணவு ஒழுங்கு செய்தல் உரையாடல்Ordering Food Conversation in Sinhala

இந்த உரையாடல் ஒரு உணவகத்தில் நடைபெறுகிறது. மேசையில் அமர்ந்திருக்கும் வாடிக்கையாளர் ஒருவர், என்னென்ன உணவு வகைகள் இருக்கின்றன என்று பணியாளரிடம் கேட்டு, தனக்கு வேண்டியதை ஒழுங்கு செய்து, ஊருக்கு விரைவாகப் போக வேண்டியிருப்பதால் பில்லையும் கேட்கிறார்.

ஒவ்வொரு வசனத்திலும் சிங்கள வாக்கியம், அதன் தமிழ் எழுத்து வடிவம், தமிழ் அர்த்தம் ஆகியன தரப்பட்டுள்ளன.

Video Lessons

உரையாடல்

சரியான உச்சரிப்பைக் கேளுங்கள்

சில சிங்கள ஒலிகளைத் தமிழ் அல்லது ஆங்கில எழுத்துக்களில் சரியாகக் குறிப்பிடுவது கடினம். அதனால், துல்லியமான உச்சரிப்பை அறிய எப்பொழுதும் ஆடியோவைக் கேளுங்கள்.

உச்சரிப்புக் குறியீடுகளைப் பற்றி மேலும் அறிக

  1. வாடிக்கையாளர் · Customer

    මම තාම කෑවේ නෑ.

    mama tāma kǣvē nǣ.மம தாம கேவே நே.

    நான் இன்னும் சாப்பிட இல்லை.

  2. කන්න මොනවද තියෙන්නේ?

    kanna monavada tiyennē?கன்ன மொனவத தியென்னே?

    சாப்பிட என்ன இருக்கு?

  3. பணியாளர் · Waiter

    දැන්ම කන්න එපා. ටිකක් ඉන්න, බත් කන්න පුළුවන්, හොඳ ව්‍යංජන තියෙනවා.

    dænma kanna epā. ṭikak inna, bat kanna puḷuvan, hon̆da vyaṁjana tiyenavā.தென்ம கன்ன எபா. டிகக் இன்ன, பத் கன்ன புளுவன், ஹொந்த வியஞ்சன தியெனவா.

    இப்ப சாப்பிட வேண்டாம். கொஞ்சம் பொறுங்க, சோறு சாப்பிடலாம், நல்ல கறி இருக்கு.

  4. வாடிக்கையாளர் · Customer

    බත් එපා. තෝසේ තියෙනවද?

    bat epā. tōsē tiyenavada?பத் எபா. தோசே தியெனவத?

    சோறு வேண்டாம். தோசை இருக்கா?

  5. பணியாளர் · Waiter

    ඔව්, තෝසේ තියෙනවා මහත්තයා. කීයක් ඕනෙද?

    ov, tōsē tiyenavā mahattayā. kīyak ōneda?ஒவ், தோசே தியெனவா மஹத்தயா. கீயக் ஓனெத?

    ஓம், தோசை இருக்கு, ஐயா. எத்தனை வேணும்?

  6. வாடிக்கையாளர் · Customer

    තුනක් දෙන්න. වෙන මොනවද තියෙන්නේ?

    tunak denna. vena monavada tiyennē?துனக் தென்ன. வென மொனவத தியென்னே?

    மூண்டு தாங்க. வேறெ என்ன இருக்கு?

  7. பணியாளர் · Waiter

    උළුඳු වඩේ, අල බෝලයි තියෙනවා. උළුඳු වඩේද නැත්තම් අල බෝලද ඕනේ?

    uḷun̆du vaḍē, ala bōlayi tiyenavā. uḷun̆du vaḍēda nættam ala bōlada ōnē?உளுந்து வடே, அல போலய் தியெனவா. உளுந்து வடேத நெத்தம் அல போலத ஓனே?

    உளுந்து வடையும் போண்டாவும் இருக்கு. உளுந்து வடையா போண்டாவா வேணும்?

  8. வாடிக்கையாளர் · Customer

    උළුඳු වඩේ දෙන්න.

    uḷun̆du vaḍē denna.உளுந்து வடே தென்ன.

    உளுந்து வடை தாங்க.

  9. අර මොනවද?

    ara monavada?அர மொனவத?

    அது என்ன?

  10. பணியாளர் · Waiter

    ඒවා ඉට්ලි. වඩේ එකක් ඇතිද?

    ēvā iṭli. vaḍē ekak ætida?ஏவா இட்லி. வடே எகக் எத்தித?

    அது இட்லி. வடை ஒண்டு போதுமா?

  11. வாடிக்கையாளர் · Customer

    එකක් මදි, දෙකක් දෙන්න.

    ekak madi, dekak denna.எகக் மதி, தெகக் தென்ன.

    ஒண்டு போதாது, ரெண்டு தாங்க.

  12. பணியாளர் · Waiter

    කීයක්ද ඉට්ලි ඕනේ?

    kīyakda iṭli ōnē?கீயக்த இட்லி ஓனே?

    எத்தனை இட்லி வேணும்?

  13. வாடிக்கையாளர் · Customer

    ඉට්ලි එකක් ඇති.

    iṭli ekak æti.இட்லி எகக் எத்தி.

    ஒரு இட்லி போதும்.

  14. பணியாளர் · Waiter

    මෙන්න, හොඳට කන්න.

    menna, hon̆daṭa kanna.மென்ன, ஹொந்தட கன்ன.

    இந்தாங்க, நல்லாய் சாப்பிடுங்க.

  15. வாடிக்கையாளர் · Customer

    මේ ඉට්ලි අලුත්ද? නැත්තම් පරණද?

    mē iṭli alutda? nættam paraṇada?மே இட்லி அலுத்த? நெத்தம் பரணத?

    இந்த இட்லி புதுசா? அல்லது பழசா?

  16. பணியாளர் · Waiter

    ඇයි මහත්තයා? මේවා ඔක්කොම අලුත් ඉට්ලි. පරණ නෑ.

    æyi mahattayā? mēvā okkoma alut iṭli. paraṇa nǣ.எய் மஹத்தயா? மேவா ஒக்கொம அலுத் இட்லி. பரண நே.

    ஏன் ஐயா? அது எல்லாம் புது இட்லி. பழசு அல்ல.

  17. வாடிக்கையாளர் · Customer

    අර කෙසෙල් ගෙඩියක් කීයද?

    ara kesel geḍiyak kīyada?அர கெசெல் கெடியக் கீயத?

    அந்த வாழைப்பழம் ஒண்டு என்ன விலை?

  18. பணியாளர் · Waiter

    මහත්තයා, එකක් රුපියල් දෙකයි.

    mahattayā, ekak rupiyal dekayi.மஹத்தயா, எகக் ருபியல் தெகய்.

    ஐயா, ஒண்டு ரெண்டு ரூபா.

  19. வாடிக்கையாளர் · Customer

    ඒවා ඉදුණු ගෙඩිද? අමු කෙසෙල්ද? දැන් කන්න පුළුවන්ද?

    ēvā iduṇu geḍida? amu keselda? dæn kanna puḷuvanda?ஏவா இதுணு கெடித? அமு கெசெல்த? தென் கன்ன புளுவந்த?

    அது பழமா? காயா? இப்ப சாப்பிடலாமா?

  20. பணியாளர் · Waiter

    ඒවා තාම හොඳට ඉදිලා නෑ මහත්තයා. හෙට තමයි කන්න පුළුවන්.

    ēvā tāma hon̆daṭa idilā nǣ mahattayā. heṭa tamayi kanna puḷuvan.ஏவா தாம ஹொந்தட இதிலா நே மஹத்தயா. ஹெட தமய் கன்ன புளுவன்.

    அது இன்னும் நல்லாய் பழுக்க இல்லை. ஐயா, நாளைக்குத் தான் சாப்பிடலாம்.

  21. வாடிக்கையாளர் · Customer

    එහෙනම් එපා. හොඳ වතුර ගේන්න.

    ehenam epā. hon̆da vatura gēnna.எஹெனம் எபா. ஹொந்த வதுர கேன்ன.

    வேண்டாம். நல்ல தண்ணி கொண்டு வாங்க.

  22. பணியாளர் · Waiter

    මෙන්න වතුර. තව ඕනෙද?

    menna vatura. tava ōneda?மென்ன வதுர. தவ ஓனெத?

    இந்தாங்கோ தண்ணி. இன்னும் வேணுமா?

  23. வாடிக்கையாளர் · Customer

    තව මුකුත් එපා. ගාණ කීයද?

    tava mukut epā. gāṇa kīyada?தவ முகுத் எபா. காண கீயத?

    இனி ஒண்டும் வேண்டாம். கணக்கு எவ்வளவு?

  24. பணியாளர் · Waiter

    ගාණ හදන්න ඕනේ මහත්තයා.

    gāṇa hadanna ōnē mahattayā.காண ஹதன்ன ஓனே மஹத்தயா.

    கணக்கு எழுத வேணும் ஐயா.

  25. வாடிக்கையாளர் · Customer

    අද සිකුරාදා. මට ඉක්මනට ගමට යන්න ඕනේ. හරි වැස්ස.

    ada sikurādā. maṭa ikmanaṭa gamaṭa yanna ōnē. hari væssa.அத சிகுராதா. மட இக்மனட கமட யன்ன ஓனே. ஹரி வெஸ்ஸ.

    இன்றைக்கு வெள்ளிக் கிழமை. நான் கெதியாய் ஊருக்குப் போக வேணும். சரியான மழையாய் இருக்கு.

  26. பணியாளர் · Waiter

    ඔව් අද සිකුරාදා. ඉක්මනට යන්න ඕනෙද? ටිකක් ඉන්න මහත්තයා. බිල දෙන්න පුළුවන්.

    ov ada sikurādā. ikmanaṭa yanna ōneda? ṭikak inna mahattayā. bila denna puḷuvan.ஒவ் அத சிகுராதா. இக்மனட யன்ன ஓனெத? டிகக் இன்ன மஹத்தயா. பில தென்ன புளுவன்.

    ஓம் இன்றைக்கு வெள்ளி. சீக்கிரம் போக வேணுமா? கொஞ்சம் பொறுங்க ஐயா. பில் தரலாம்.

முக்கிய சொற்கள்

SinhalaTransliterationTamil
අර
அர
அந்த
මේක
மேக
இது
ඉතිං
இதிங்
இனி
තව
தவ
இன்னும்
කීයද?
கீயத?
எவ்வளவு?
ඔක්කොම
ஒக்கொம
எல்லாம்
ඇයි?
எயி?
ஏன்?
ගාණ
காண
கணக்கு
ව්‍යංජන
வியஞ்சன
கறி
ඉක්මනට
இக்மனட
கெதியாய் / சீக்கிரம்
ගේන්න
கேன்ன
கொண்டு வாங்க
වතුර
வதுர
தண்ணீர்
හොඳට
ஹொந்தட
நல்லாய்