Skip to content

ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தி எளிதாக சிங்களம் பேசுவது எப்படி?Speak Sinhala Using English Words

சிங்களம் சரளமாகப் பேசத் தெரியாதவர்களுக்கு ஒரு சுலபமான வழி இருக்கிறது. நமக்குத் தெரிந்த ஆங்கிலச் சொற்களுடன் சில அடிப்படைச் சிங்கள வார்த்தைகளைச் சேர்த்தாலே ஓரளவு சமாளித்துவிடலாம். கடைகளிலோ பொது இடங்களிலோ பேசும்போது இந்த முறை மிகவும் உதவியாக இருக்கும்.

1. “பண்ணுங்க” அல்லது “செய்யுங்க” (Karanna - கரன்ன)

தமிழில் “பண்ணுங்க” அல்லது “செய்யுங்க” எனச் சொல்வதற்குச் சிங்களத்தில் Karanna எனலாம். ஒரு வினைச்சொல்லுக்குச் (verb) சிங்களத்தில் என்ன சொல்வது எனத் தெரியாவிட்டால், அந்த ஆங்கில வார்த்தையுடன் “Karanna” என்பதைச் சேர்த்துப் பேசுங்கள்.

ஆங்கிலம் + சிங்களம்தமிழ் உச்சரிப்புதமிழ் விளக்கம்
Off karannaஓஃப் கரன்னOff பண்ணுங்க
On karannaஓன் கரன்னOn பண்ணுங்க
Cut karannaகட் கரன்னCut பண்ணுங்க
Call karannaகோல் கரன்னCall பண்ணுங்க
Drive karannaட்ரைவ் கரன்னDrive பண்ணுங்க
Type karannaடைப் கரன்னType பண்ணுங்க

2. செய்ய வேணாம் / செய்ய வேணும் (Epa / Ona)

ஒரு செயலைச் செய்ய வேண்டாம் அல்லது செய்ய வேண்டும் என்று கூறுவதற்கும் இதே முறையைப் பின்பற்றலாம்.

Karanna epa (செய்ய வேணாம் - கரன்ன எபா)

ஒரு செயலைச் “செய்ய வேணாம்” என்று சொல்வதற்கு Karanna epa என்று சொல்லலாம்.

ஆங்கிலம் + சிங்களம்தமிழ் உச்சரிப்புதமிழ் விளக்கம்
Call karanna epaகோல் கரன்ன எபாCall பண்ண வேணாம்
Cut karanna epaகட் கரன்ன எபாCut பண்ண வேணாம்
Drive karanna epaட்ரைவ் கரன்ன எபாDrive பண்ண வேணாம்

(வெறுமனே “Epa” (எபா) என்று சொன்னாலும் அவர்களுக்குப் புரிந்துவிடும்).

Karanna ona (செய்ய வேணும் - கரன்ன ஓன)

அதேபோல, ஒரு செயலைச் “செய்ய வேணும்” என்று சொல்வதற்கு Karanna ona என்று கூறலாம்.

ஆங்கிலம் + சிங்களம்தமிழ் உச்சரிப்புதமிழ் விளக்கம்
Call karanna onaகோல் கரன்ன ஓனCall பண்ண வேணும்
Cut karanna onaகட் கரன்ன ஓனCut பண்ண வேணும்
Type karanna onaடைப் கரன்ன ஓனType பண்ண வேணும்

3. “தாங்க” (Dhenna - தென்ன)

கடைகளில் பொருட்களைக் கேட்கும்போது “தாங்க” எனச் சொல்ல Dhenna என்பதைப் பயன்படுத்துங்கள்.

ஆங்கிலம் + சிங்களம்தமிழ் உச்சரிப்புதமிழ் விளக்கம்
Rice dhennaரைஸ் தென்னRice தாங்க
Water dhennaவோட்டர் தென்னதண்ணி தாங்க
Meka dhennaமேக்க தென்னஇதைத் தாங்க (பொருள் பெயர் தெரியாதபோது)
Eaka dhennaஏக்க தென்னஅதைத் தாங்க

4. ஆங்கிலப் பொருட்களின் பெயர்களுடன் “Eka” (எக்க) சேர்ப்பது

ஒரு பொருளின் பெயரைக் கூறும்போது, அதனுடன் Eka என்ற சொல்லைச் சேர்த்துப் பேசினால் அது இயல்பான சிங்கள வாக்கியம்போலவே மாறிவிடும்.

ஆங்கிலம் + சிங்களம்தமிழ் உச்சரிப்புதமிழ் விளக்கம்
File eka dhennaஃபைல் எக்க தென்னFile-ஐ தாங்க
Table eka dhennaடேபிள் எக்க தென்னTable-ஐ தாங்க
Watch eka dhennaவொட்ச் எக்க தென்னWatch-ஐ தாங்க

வேற்றுமை உருபுகள் (ஐ, கு, இல்)

தமிழில் எப்படி வார்த்தைகளின் பின்னால் வேற்றுமை உருபுகள் வருகிறதோ, அதேபோல eka என்ற சொல்லுடன் சில எழுத்துக்களைச் சேர்த்துப் பேச முடியும்:

சிங்களப் பயன்பாடுதமிழ் உச்சரிப்புதமிழ் விளக்கம்
Phone ekata dhaannaபோன் எக்கட்ட தான்னபோனுக்குப் போடுங்க (உதா: Reload)
Phone eken balannaபோன் எக்கென் பலன்னபோனில் பாருங்கள்
Phone eka dhennaபோன் எக்க தென்னபோனைத் தாங்க

5. “இருக்கா?” (Innawadha / Thiyenawadha)

“இருக்கா” என்று கேட்பதற்குச் சிங்களத்தில் இரண்டு வார்த்தைகள் உள்ளன. உயிருள்ளவை, உயிரற்றவை எனப் பிரித்து இதைப் பயன்படுத்த வேண்டும்.

உயிருள்ளவை: Innawadha? (இன்னவதா?)

ஆட்களைப் பற்றி விசாரிக்க இதைப் பயன்படுத்த வேண்டும்.

ஆங்கிலம் + சிங்களம்தமிழ் உச்சரிப்புதமிழ் விளக்கம்
Sir innawadha?சேர் இன்னவதா?Sir இருக்காங்களா?
Madam innawadha?மேடம் இன்னவதா?Madam இருக்காங்களா?

உயிரற்றவை: Thiyenawadha? (தியனவதா?)

பொருட்கள் இருக்கிறதா எனக் கேட்க இதைப் பயன்படுத்த வேண்டும்.

ஆங்கிலம் + சிங்களம்தமிழ் உச்சரிப்புதமிழ் விளக்கம்
Rice thiyenawadha?ரைஸ் தியனவதா?Rice இருக்கா?
Biscuits thiyenawadha?பிஸ்கட்ஸ் தியனவதா?Biscuits இருக்கா?

6. “இல்லையா?” மற்றும் “இல்லை” (Naedhdha / Nae)

ஒரு பொருள் அல்லது நபர் “இல்லையா?” எனக் கேட்பதற்கு Naedhdha என்று சொல்லலாம். இதற்குப் பதிலாக “இல்லை” என்று கூற Nae என்று சொல்ல வேண்டும். இது உயிருள்ளவை, உயிரற்றவை என இரண்டுக்குமே பொருந்தும்.

ஆங்கிலம் + சிங்களம்தமிழ் உச்சரிப்புதமிழ் விளக்கம்
Pan naedhdha?பாண் நெத்த?பாண் இல்லையா?
Madam naedhdha?மேடம் நெத்த?Madam இல்லையா?
Naeநேஇல்லை

முயற்சி செய்து பாருங்கள்: அடுத்த முறை கடைக்குச் செல்லும்போதோ நண்பர்களிடம் பேசும்போதோ இந்த வார்த்தைகளில் ஒன்றைப் பயன்படுத்திப் பாருங்கள். முழு வாக்கியமாகப் பேசத் தெரியாவிட்டாலும், இந்தச் சிறு வார்த்தைகள் அன்றாடத் தேவைகளுக்குப் பெரிய அளவில் கைகொடுக்கும்.